சினிமா

ரோபோ சங்கரின் ‘ஈகோ ராமன்’ படம்.. விரைவில் திரைக்கு

இந்த படத்தை கணேசன் நாச்சிமுத்தி இயக்கியுள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கலக்கி வந்த நடிகர் ரோபோ சங்கர்,கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'ஈகோ ராமன்' என்ற படம் விரைவில் ரிலீசுக்கு வருகிறது.

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.சுதா தயாரிப்பில், கணேசன் நாச்சிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரோபோ சங்கருடன் சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா, கவிதா ரமேஷ், சப்பானி முரளி, சேரன்ராஜ், லதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ரெய்மன் ராட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் குறித்து படக்குழுவினர் கூறும்போது, "ஒரு மாணவன் தன் அம்மாவின் கனவை நிறைவேற்ற அரசு வேலைக்கு தேர்வு எழுதுகிறான். இந்த காலகட்டத்தில் ஆசிரியருக்கும், அவனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இறுதியில் வென்றது ஆசிரியரா? மாணவனா ? என்பதை விறுவிறுப்புடன் சொல்லும் கதையே 'ஈகோ ராமன்'. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் விரைவில் படத்தை ரிலீசுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். உத்ரா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. ரோபோ சங்கர் ஆசையுடன் நடித்து கொடுத்த படம் இது. அவர் இப்போது இல்லை எனும்போது மனது வலிக்கிறது”, என்றனர்.

SCROLL FOR NEXT