சினிமா

‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் டிரெய்லர் வெளியானது

இத்திரைப்படம் வருகிற ஜூலை 31 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

சென்னை,

'ஸ்பைடர்மேன்: ஹோம் கம்மிங்' திரைப்படத்தின் மூலம் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 'ஸ்பைடர்மேன்: பார் ப்ரம் ஹோம்' மற்றும் 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்த மூன்று திரைப்படங்களையும் ஜான் வாட்ஸ் இயக்கியிருந்தார்.

தற்போது, இந்த வரிசையில் நான்காவது திரைப்படமாக ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ உருவாகியுள்ளது. இப்படத்தை டெஸ்டின் டேனியல் இயக்கியுள்ளார்.

நட்சத்திர பட்டாளத்துடன் உருவான புதிய படம்

இந்தப் படத்தில் டாம் ஹாலண்டுடன் ஸெண்டயா, ஜேக்கப் பேட்டலோன், சாடி சிங், லிசா காலோன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மார்வெல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், வரும் ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

புதிய டிரெய்லர் வைரல்

இந்த நிலையில், ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் புதிய டிரெய்லர் படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளால் உருவாகியுள்ள இந்த டிரெய்லர், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், மார்வெல் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.