மும்பை

அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை- வசாயில் பரிதாபம்

வசாயில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வசாய், 

வசாயில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாடியில் இருந்து குதித்தார்

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு வசந்த் நக்ரி பகுதியில் உள்ள சுரஜ் முகி என்ற 7 மாடி கட்டிடத்தில் 20 வயது கல்லூரி மாணவர் வசித்து வந்தார். கல்லூரி மாணவர் இன்று காலை பயிற்சி வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு தரை தளத்தில் உள்ள வீட்டில் இருந்து வெளியே வந்தார். ஆனால் அவர் பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றார்.

பின்னர் அவர் அங்கு இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. மாணவர் விழுந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

சோகம்

உடனடியாக குடும்பத்தினர் மாணவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மொட்டை மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் வசாய் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT