குருபூஜை வழிபாடு 
ஆன்மிகம்

அருணாப்பேரி முத்துமாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற குருபூஜை விழா

முத்துமாரியம்மனுக்கு 500 கிலோ எடையில் கேந்தி, மல்லி, தாமரை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற 36 - ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு அம்பாளுக்கு புஷ்ப அலங்காரத்தில், விவசாயிகள் விளைவித்த 1 டன் காய், கனி, 1 டன் அரிசியினை படைத்து பொது மக்கள் வழிபட்டனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி, ஸ்ரீ அழகு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 36-வது ஆண்டு குருபூஜை விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில், அழகு முத்துமாரியம்மனுக்கு 500 கிலோ எடையில் கேந்தி, மல்லி, தாமரை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண் அருணாப்பேரி கிராமத்தில் விவசாயிகள் விளைவித்த 1 டன் எடையிலான பனங்கிழங்கு, சோளம், நெல்லி, சீனிக்கிழங்கு, வாழைப்பழங்கள், தர்ப்பூசணி, வாழை, முட்டைகோஸ், கப்பகிழங்கு, பலாப்பழம், நுங்கு, திராட்சை உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள், கிழங்குகள் மற்றும் 3 ஆயிரம் வடை, 3 ஆயிரம் லட்டு போன்றவற்றை அம்பாளுக்கு படைத்து மகா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பூஜை நிறைவடைந்த பின்னர் அம்பாளுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் போன்றவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.