ஆன்மிகம்

புரட்டாசி 4-வது சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

சாமி தரிசனம்

புரட்டாசி மாதத்தில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருவது வழக்கம். இதில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பலர் மஞ்சள் ஆடை அணிந்து, கோவிந்த மாலை தரித்து நேர்த்திக்கடனாக நடந்து வந்து விரதத்தை நிறைவு செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது புரட்டாசி 4-வது சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து வருவதுடன் தசரா விடுமுறையும் இருப்பதால், திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவலின்படி, நேற்று ஒரே நாளில் 68,187 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 23,923 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.45 கோடி காணிக்கை வசூலானது. மேலும் 4.29 லட்சம் லட்டுகள் விற்பனையாகின. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT