ஆன்மிகம்

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 76 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

தேவஸ்தானம் அறிவித்த உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி ஆகும்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 76 ஆயிரத்து 060 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 32 ஆயிரத்து 248 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி ஆகும். அன்று 4 லட்சத்து 56 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 21 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். அஸ்வினி மருத்துவமனையில் 4 ஆயிரத்து 208 பேர் மருத்துவச் சிகிச்சை பெற்றனர்.

தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT