காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், வந்தவாசி நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற 27 நட்சத்திர கோவில் உள்ளது. இங்குள்ள சனீஸ்வரர் சன்னதியில் தினமும் பூஜை நடைபெறும். தினமும் இந்த பூஜை நேரத்தில் காகம் ஒன்று கோவிலுக்கு தவறாமல் வந்து விடுகிறது.
பூஜை நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிட்ட பின்னரே அந்த காகம் அங்கிருந்து பறந்து செல்கிறது. இது பக்தர்களிடையே ஆழ்ந்த பக்தியையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சனீஸ்வர பகவானின் வாகனம் காகம் ஆகும். எனவே, தினமும் பூஜை நேரத்தில் வரும் காகத்தை சனீஸ்வர பகவானின் அருளின் அடையாளமாகவே பக்தர்கள் கருதி வழிபடுகின்றனர். சனீஸ்வர பகவானின் பூஜை நேரத்தில் வரும் காகத்தை நேரில் காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.