ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் 
ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 12-5-2026 முதல் 18-5-2026 வரை

திருவில்லிபுத்தூரில் நாளை ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

இந்த வார விசேஷங்கள்

12-ந் தேதி (செவ்வாய்)

* நாங்குநேரி உலகநாயகி அம்மன் புஷ்பாஞ்சலி.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, சென்னகேசவப் பெருமாள் தலங்களில் விடையாற்று உற்சவம்.

* வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா.

* காரைக்குடி கொப்புடையம்மன் விழா தொடக்கம்.

* கீழ்நோக்கு நாள்.

13-ந் தேதி (புதன்)

* முகூர்த்த நாள்.

* சர்வ ஏகாதசி.

* திருவரங்கம் நம்பெருமாள் வண்டலூர் சப்பரத்தில் புறப்பாடு.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

* மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

14-ந் தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்.

* பிரதோஷம்.

* திருவரங்கம் நம்பெருமாள் ரத உற்சவம்.

* காரைக்குடி கொப்புடையம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.

* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

15-ந் தேதி (வெள்ளி)

* வீரபாண்டி கவுமாரியம்மன் ரத உற்சவம்.

* சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.

* சமநோக்கு நாள்.

16-ந் தேதி (சனி)

* அமாவாசை.

* நெல்லை கயிலாசபுரம் கயிலாசநாதர் உற்சவம் ஆரம்பம்.

* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீசண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

* கீழ்நோக்கு நாள்.

17-ந் தேதி (ஞாயிறு)

* கார்த்திகை விரதம்.

* காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி.

* சிவகாசி விசுவநாதர் விழா தொடக்கம்.

* கீழ்நோக்கு நாள்.

18-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விழா தொடக்கம்.

* சிவகாசி விசுவநாதர் பூத வாகனத்தில் பவனி.

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.