மதுரை மீனாட்சி அம்மன் 
ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 14-7-2026 முதல் 20-7-2026 வரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நாளை முளைக்கொட்டு உற்சவம் ஆரம்பம்.

இந்த வார விசேஷங்கள்

இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு:

ஜூலை 14-ந் தேதி (செவ்வாய்)

* அமாவாசை.

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.

* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீசண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

15-ந் தேதி (புதன்)

* நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி வருசாபிஷேகம்.

* ராமநாதபுரம் கோதண்டராமர் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.

* மேல்நோக்கு நாள்.

16-ந் தேதி (வியாழன்)

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் முளைக்கொட்டு உற்சவம் ஆரம்பம்.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தெப்ப உற்சவம்.

* கீழ்நோக்கு நாள்.

17-ந் தேதி (வெள்ளி)

* சதுர்த்தி விரதம்.

* மதுரை மீனாட்சி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் திருவீதி உலா.

* மிலட்டூர் விநாயகப்பெருமான் புறப்பாடு.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* கீழ்நோக்கு நாள்.

18-ந் தேதி (சனி)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித் தவசு ஆரம்பம்.

* ராமநாதபுரம் கோதண்டராமர் சேஷ வாகனத்தில் பவனி.

* திருமயம் ஆண்டாள் புறப்பாடு.

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, காரமடை அரங்கநாதர், திருச்சேறை சாரநாதர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

* கீழ்நோக்கு நாள்.

19-ந் தேதி (ஞாயிறு)

* சஷ்டி விரதம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் உற்சவம் ஆரம்பம்.

* ராமநாதபுரம் கோதண்டராமர் திருக்கல்யாணம்.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை.

* மேல்நோக்கு நாள்.

20-ந் தேதி (திங்கள்)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

* மதுரை மீனாட்சி அம்மன் விருட்சப சேவை.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* சமநோக்கு நாள்.