இருக்கன்குடி மாரியம்மன் 
ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 4-8-2026 முதல் 10-8-2026 வரை

ஆகஸ்ட் 7-ம் தேதி இருக்கன்குடி மாரியம்மன் விழா தொடக்கம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.

இந்த வார விசேஷங்கள்

இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு:

ஆகஸ்ட் 4-ந் தேதி (செவ்வாய்)

* சஷ்டி விரதம்.

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன், சக்தி அழைப்பு விழா.

* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

* திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

5-ந் தேதி (புதன்)

* மேல்மருவத்தூர், நயினார் கோவில், திருவானைக்காவல், காளையார்கோவில், திருப்பாதிரிப்புலியூர், ராமேஸ்வரம் தலங்களில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பொங்கல் விழா.

* நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன், திருவாடானை சிநேகவல்லியம்மன் விழா தொடக்கம்.

* சமநோக்கு நாள்.

6-ந் தேதி (வியாழன்)

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.

* நயினார்கோவில் அன்னை சவுந்திரநாயகி பல்லாங்குழி ஆடிவரும் காட்சி.

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க காமதேனு வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

7-ந் தேதி (வெள்ளி)

* கார்த்திகை விரதம்.

* இருக்கன்குடி மாரியம்மன் விழா தொடக்கம்.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் உலா.

* கீழ்நோக்கு நாள்.

8-ந் தேதி (சனி)

* மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு.

* இருக்கன்குடி மாரியம்மன் பவனி.

* சமநோக்கு நாள்.

9-ந் தேதி (ஞாயிறு)

* சர்வ ஏகாதசி.

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் புஷ்ப வெள்ளி விமானத்தில் பவனி.

* நயினார்கோவில் சவுந்திரநாயகி, வேணுகான கிருஷ்ணமூர்த்தி அலங்காரம்.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சேஷ வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

10-ந் தேதி (திங்கள்)

* பிரதோஷம்.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.

* நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் அன்ன வாகனத்தில் பவனி.

* மேல்நோக்கு நாள்.‘