சுவாமிமலை சுவாமிநாத சுவாமி 
ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 9-6-2026 முதல் 15-6-2026 வரை

சுவாமிமலையில் நாளை மறுநாள் முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

இந்த வார விசேஷங்கள்

ஜூன் 9-ந் தேதி (செவ்வாய்)

* சுவாமிமலை முருகப்பெருமானுக்கு பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

* குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

10-ந் தேதி (புதன்)

* திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

11-ந் தேதி (வியாழன்)

* சர்வ ஏகாதசி.

* சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

* மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தலங்களில் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

12-ந் தேதி (வெள்ளி)

* பிரதோஷம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

13-ந் தேதி (சனி)

* கார்த்திகை விரதம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர், திருக்கோஷ்டியூர், ராமகிரிபேட்டை தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.

* வேலூர் ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரத உற்சவம்.

* கீழ்நோக்கு நாள்.

14-ந் தேதி (ஞாயிறு)

* அமாவாசை.

* மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு.

* திருக்கண்ணபுரம் சவுரிராஜர், விபீசண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

* ஆவுடையார்கோவில் சிவபெருமான் பவனி.

* மேல்நோக்கு நாள்.

15-ந் தேதி (திங்கள்)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* சிதம்பரம் சிவபெருமான் பவனி.

* திருவள்ளூர் வீரராகவர், மதுரை கூடலழகர் தலங்களில் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.