ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 13-10-2026 முதல் 19-10-2026 வரை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை மறுநாள் அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

இந்த வார விசேஷங்கள்

இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு:

அக்டோபர் 13-ந் தேதி (செவ்வாய்)

* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் பட்டாபிஷேக காட்சி.

* குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.

* சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* கீழ்நோக்கு நாள்.

14-ந் தேதி (புதன்)

* சதுர்த்தி விரதம்.

* சிருங்கேரி சாரதாம்பாள் வைஷ்ணவி கருட வாகனத்தில் புறப்பாடு.

* பாபநாசம் சிவபெருமான் திருவீதி உலா.

* காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி தலங்களில் சிறப்பு அலங்காரம்.

* சமநோக்கு நாள்.

15-ந் தேதி (வியாழன்)

* குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

* சிருங்கேரி சாரதாம்பாள் மோகினி அலங்காரம்.

* திருவெம்பல், பாபநாசம், திருக்குற்றாலம் தலங்களில் சிவபெருமான் திருவீதி உலா.

* சமநோக்கு நாள்.

16-ந் தேதி (வெள்ளி)

* சஷ்டி விரதம்.

* மதுரை மீனாட்சி அம்மன் அர்த்தநாரீசுவரர் திருக்கோலக் காட்சி.

* குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம்.

* மதுரை வீரராகவர், அருப்புக்கோட்டை சவுடாம்பிகை அம்மன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரம்.

* கீழ்நோக்கு நாள்.

17-ந் தேதி (சனி)

* சிருங்கேரி சாரதாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.

* பாபநாசம் சிவபெருமான் திருவீதி உலா.

* திருவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை சீனிவாசர் கருட வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

18-ந் தேதி (ஞாயிறு)

* துர்க்காஷ்டமி.

* நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் முத்தங்கி சேவை.

* மதுரை மீனாட்சி அம்மன் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலக் காட்சி.

* ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி, மதுரை வீரராகவர் தலங்களில் சிறப்பு அலங்காரம்.

* கீழ்நோக்கு நாள்.

19-ந் தேதி (திங்கள்)

* சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.

* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.

* குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலம்.

* மேல்நோக்கு நாள்.

SCROLL FOR NEXT