நெல்லை,
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று முதல் நாளை வரை மூன்று நாட்களுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு பஸ்களில் மட் டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்துக் கழகம் சார்பில் சுமார் 150 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்காக அகஸ்தியர்பட்டி பகுதியில் தற்காலிக பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காக 600 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆடி அமாவாசை தினத்தன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதுடன், பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் செய்வார்கள். இதனால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பாபநாசம் வனச்சோதனை சாவடியிலும், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் விலக்கு பகுதியிலும் வனத்துறையினர் தடை செய் யப்பட்ட பொருட்கள் கொண்டு வந்துள்ளார்களா? என தீவிர சோதனை செய்து கோவிலுக்குள் அனுமதித்து வருகின்றனர்.