திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் 
ஆன்மிகம்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா.. 11-ந் தேதி கொடியேற்றம்

விழாவின் 7-ம் நாள் இரவு 9 மணிக்கு வாகன பவனி, அதைத்தொடர்ந்து துரியோதன வதம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

திருவட்டார்,

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா வருகிற 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு, காலையில் நிர்மால்ய பூஜை, ஸ்ரீ பூத பலி நடைபெறுகிறது. அதன்பின் காலை 8.45 மணியில் இருந்து முதல் 9.45 மணிக்குள் திருக்கொடி ஏற்றப்படுகிறது. இரவில் சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.

விழாவின் 2-வது நாளான 12-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு நவநீதம் நாராயணியம் சமிதி வழங்கும் நாராயணீய பாராயணம், இரவு 9 மணிக்கு வாகன பவனி, 10 மணிக்கு ருக்மணி சுயம்வரம் கதகளி, 3-ம் நாள் விழாவான வருகிற 13-ந் தேதி இரவு 9 மணிக்கு வாகன பவனி, 10 மணிக்கு கதகளி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

துரியோதன வதம்

விழாவின் 4-ம் நாளான வருகிற 14-ந் தேதி இரவு 7.30 மணிக்கு திருவாதிரைக்களி, 9 மணிக்கு வாகன பவனி, 5-ம் நாள் விழாவான வருகிற 15-ந் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

6-ம் நாள் விழாவான வருகிற 16-ந் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 9.30 மணிக்கு வாகன பவனி ஆகிய நிகழ்ச்சிகளும், 7-ம் நாள் விழாவான காலை 9 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 9 மணிக்கு வாகன பவனியும் அதைத்தொடர்ந்து துரியோதன வதம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தளியல் ஆற்றில் ஆறாட்டு

18-ந் தேதி இரவு 9 மணிக்கு வாகன பவனி, 19-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ராமாயண பாராயணம், இரவு 9.30 மணிக்கு சாமி கருட வாகனத்தில் தளியல் பகுதியில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 20-ந் தேதி காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் ஆறாட்டுக்கு தளியல் ஆற்றுக்கு சுவாமி எழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

SCROLL FOR NEXT