திருப்பதி.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் உற்சவமூர்த்திகளின் உஷ்ணத்தை குறைக்க சிறப்பு உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. அதில் 3 நாட்கள் நடைபெறும் புக்கா உற்சவமும் (புக்கோற்சவம்) ஒன்று. அவ்வகையில், இந்த ஆண்டின் 'புக்கா' உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. சுப்ரபாதத்துடன் விஸ்வரூப தரிசனத்துடன் சடங்குகள் தொடங்கின.
பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோவிந்தராஜ சுவாமி பல்லக்கில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் உள்ள புக்கா மண்டபத்தை அடைந்தார்.
அங்கு, மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், சமர்ப்பணம், ஆஸ்தானம் நடந்தது. மாலை மகாலட்சுமி தாயார் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை, ஆஸ்தானம் ஆகியவை நடந்தன. புக்காவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புக்கா உற்சவத்தில் கோவில் கண்காணிப்பாளர் சிரஞ்சீவி, கோவில் ஆய்வாளர் தனஞ்செயா மற்றும் அலுவலர்கள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.