கருட சேவை 
ஆன்மிகம்

தஞ்சை மகர்நோம்புச்சாவடி வேங்கடேச பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா- கருட சேவை

விழாவின் முதல் நாளான இன்று பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மகர்நோம்புச்சாவடியில் ஸ்ரீதேவி, பூதேவி அலுமேலு மங்கை சமேத வேங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 100-ம் ஆண்டு சித்திரை திருவிழா இன்று தொடங்கியது.

விழாவை முன்னிட்டு இன்று காலை பெருமாளுக்கு திருமஞ்சனமும், சிறப்பு பூஜையும் நடந்தது. அதனைதொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக நாளை மறுநாள் ( புதன்கிழமை) வெண்ணைத்தாழி புறப்பாடும், 24-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.

மே 1-ந்தேதி அனுமன் வாகனத்திலும், 3-ந்தேதி குதிரை வாகனத்திலும் பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மே 5-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவுபெறுகிறது.