திருமலை,
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
”திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) பல்வேறு விழாக்கள் நடக்கிறது. 14-ந்தேதி புரசைவாரி தோட்டத்துக்கு எழுந்தருள்கி றார். 16-ந்தேதி நாக சதுர்த்தி மற்றும் காஷ்யப மகரிஷியின் திருநட்சத்திரம். 17-ந்தேதி கருட பஞ்சமியை முன்னிட்டு கருட வாகன வீதிஉலா, 21-ந்தேதி மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா நினைவு நாள், 22-ந்தேதி பவித்ரோற் சவத்துக்கான அங்குரார்ப்பணம், 25-ந்தேதி பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.
28-ந்தேதி சிரவண பவுர்ணமி, கருட வாகன வீதிஉலா, வைகானச மகா முனி ஜெயந்தி, ஹயக்ரீவர் ஜெயந்தி, 29-ந்தேதி உற்சவர் மலையப்பசாமி வைகானசாரியார் சன்னதிக்கு எழுந்தருளும் வைபவம் நடக்கிறது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.