திருமலை,
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (ஏப்ரல்) பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடக்கின்றன. 13-ந்தேதி பாஷ்யகார உற்சவம் ஆரம்பம். 20-ந்தேதி அக்ஷய திரிதியை, பரசுராம ஜெயந்தி, பிருகு மகரிஷி வருட திரு நட்சத்திரம், சீனிவாச தீட்சிதுலு வருட திரு நட்சத்திரம். 21-ந்தேதி அனந்தாழ்வார் உற்சவங்கள் ஆரம்பம், சங்கர ஜெயந்தி.
மேற்கண்ட உற்சவங்கள் நடக்கின்றன.