ஆன்மிகம்

சுபமூகூர்த்த தினம், வார விடுமுறையையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

சுபமூகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று மட்டும் 25க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோயில் வளாகத்தில் நடைபெற்றன.

தூத்துக்குடி,

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் கோவில்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோல திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

25க்கும் மேற்பட்ட திருமணங்கள்

சுபமுகூர்த்த தினத்தில் திருச்செந்தூர் கோவிலில் திருமணம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் காலை முதலே புதுமண ஜோடிகளுடன் பெற்றோர்கள், உறவினர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.

கோவில் வளாகம், சண்முகவிலாச மண்டபம் போன்ற இடங்களில் 25-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. புதுமண ஜோடிகளுடன் உறவினர்கள், நண்பர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். இதனால் கோவில் வளாகத்தில் புதுமண ஜோடிகள், உறவினர்களின் கூட்டம் அலைமோதியது.

3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

இதற்கிடையே விடுமுறை தினம் என்பதால், கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முதலே பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசன வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.

SCROLL FOR NEXT