சென்னை,
சென்னையில் உள்ள ஏகாந்த லிங்கேஸ்வரர் கோவிலில் இன்று அன்ன அபிஷேகம் நடைபெற்றது.
சிவன் கோவில்களில் மகா சிவராத்திரியை போன்று ஐப்பசி மாதம் பவுர்ணமியில் வரும் அன்ன அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.
இந்நாளில் அன்னம் (சோறு) அலங்காரத்தில் சிவன் காட்சியளிப்பார். மற்ற நாட்களில் காணும் அபிஷேகத்தை காட்டிலும், அன்ன அபிஷேகத்தில் சிவனை காண்பது கர்மவினையை தீர்க்கும். அந்த வகையில் ஐப்பசி மாத பவுர்ணமி தினமான இன்று சிவன் கோவில்களில் அன்ன அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை கொரட்டூரில் புகழ்பெற்ற ஏகாந்த லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று ஏகாந்த லிங்கேஸ்வரருக்கு அன்ன அபிஷேகம் நடைபெற்றது. இந்த அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.