தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் 
ஆன்மிகம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்

சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று வைகாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தயிர், எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் தங்க கவச அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT