ஆன்மிகம்

திருப்பதியில் தங்கத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்தது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. மலையப்பசாமி பிரகாசமான சிவப்பு நிற இக்ஸோரா (வெட்சி) மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த நிலையில், திருப்பதி நலையில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை ஏழுமலையானின் தங்க தேரோட்டம் கோயில் மாட வீதிகளில் நடைபெற்றது. தங்கத் தேரோட்டம் கண்டு பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக உபய நாச்சியார்கள் சமேதராக கோவிலில் இருந்த புறப்பட்ட மலையப்பர் தங்கத்தேரில் எழுந்தள்ளினார். தொடர்ந்து உற்சவர்களுக்கு தூபதீப நெய்வேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தங்க தேருக்கு பலி உள்ளிட்ட வைதீக நிகழ்ச்சிகளுக்கு பின் திருப்பதி மலையில் உள்ள கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் தங்க தேரோட்டம் நடைபெற்றது. தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், உயர் அதிகாரிகள், பெண்கள் ஆகியோர் வடம் பிடிக்க கோயில் மாட வீதிகளில் நடைபெற்ற தங்கத் தேரோட்டத்தின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT