குருபூஜை சிறப்பு யாகம் 
ஆன்மிகம்

தாடிக்கொம்பு சிவதாடி சித்தர் ஜீவசமாதியில் குருபூஜை விழா

குருபூஜை விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் சன்னியாசிகளும் சாதுக்களும் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் உள்ள சிவதாடி சித்தர் ஜீவசமாதி பீடத்தில் ஐந்தாம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இன்று காலையில் குருபூஜை மற்றும் யாக வேள்விகள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக அகரம் அதிமுக பேரூர் கழகச் செயலாளரும், முன்னாள் அகரம் பேரூராட்சி தலைவருமான அகரம் சக்திவேல், மதுரை மேனேந்தல்வீர முனியாண்டி கோவில் பூசாரி கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

குருபூஜை விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்து சன்னியாசிகளும் சாதுக்களும் கலந்து கொண்டனர்.