குருபூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்த பக்தர்கள் 
ஆன்மிகம்

எடமேலையூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் அருள் ஒளி சித்தர் 5-ம் ஆண்டு குருபூஜை

சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

ஒரத்தநாடு,

ஒரத்தநாடு அருகே வடுவூர் எடமேலையூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் கோவிலில் அருள்ஒளி சித்தர் டாக்டர் சக்கரபாணி சுவாமி 5ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக சிறப்பு யாகம் நடைபெற்றது. தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி சுவாமி சித்தர் பீடம் சித்தர் சீனிவாசன் சுவாமிகள் கலந்துகொண்டு வேத மந்திரங்கள் கூறி, யாக பூஜைகளை நடத்தினார்.

மேலும், மகாலிங்கேஸ்வரர் மற்றும் அருள் ஒளி சித்தர் சக்கரபாணி சுவாமிக்கு பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், இளநீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், தயிர் அபிஷேகம், உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன.

இந்த சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜையில் ஊரணிபுரம் டாக்டர் நவமணி பரமேஸ்வரி, மலேசியா சிவா குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அலங்காரித்து வைக்கப்பட்டிருந்த அருள் ஒளி சித்தர் டாக்டர் சக்கரபாணி சுவாமி ஜீவசமாதியில் விளக்கேற்றி வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT