அனுமன் 
ஆன்மிகம்

அபயம் அளிக்கும் அனுமன் மந்திரம்

அனுமனை தொடர்ந்து வழிபட்டு வந்தால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் நீங்கும், பயம் விலகும்.

வாயு பகவானின் அருளால் அஞ்சனை-கேசரி தம்பதியருக்கு பிறந்தவர் அனுமன். ராமனின் தீவிர பக்தனான இவர் ஆஞ்சநேயர், மாருதி, ராம தூதர், சிறிய திருவடி என பல பெயர்களில் பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

வலிமை, அறிவு, தைரியம் மற்றும் பக்திக்கு அடையாளமாக விளங்கும் அனுமனை வழிபட்டால் ராமபிரானின் அருளையும் சேர்த்து பெறலாம். ஆஞ்சநேயர் வழிபாடு என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அனுமன் காயத்ரி மந்திரம்

“ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

வாயு புத்ராய தீமஹி

தந்நோ ஹனுமத் ப்ரசோதயாத்”

இந்த அனுமன் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி, அனுமனுக்கு துளசி மாலை அணிவித்தும், துளசி அர்ச்சனை செய்தும் வழிபட வேண்டும். வெற்றிலை அல்லது வடை மாலை சாற்றியும், வெண்ணெய் சாற்றியும் வழிபடலாம்.

பலன்கள்

இவ்வாறு தொடர்ந்து வழிபட்டு வந்தால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் நீங்கும், பயம் விலகும். குடும்ப ஒற்றுமை பலப்படும், வீரம், அறிவு, மன பலம் அதிகரிக்கும், செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம். எனவே அனுமனின் வாலுக்கு சந்தனம், குங்குமம் வைத்து வழிபட்டு வந்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகி, நன்மைகள் பலவும் வந்துசேரும் என்பது நம்பிக்கை.