ஹரிநாம சங்கீர்த்தனம் 
ஆன்மிகம்

உலக அமைதி வேண்டி மதுரை திருப்பாலை இஸ்கான் மையத்தில் ஹரிநாம சங்கீர்த்தனம்

ஹரிநாம சங்கீர்த்தன நிகழ்ச்சியில் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மதுரை,

உலக அமைதிக்காகவும், மக்கள் ஆன்மிக வாழ்க்கையில் முன்னேற்றம் பெறவும் மதுரை திருப்பாலை இஸ்கான் மையத்தின் சார்பில் ஹரிநாம சங்க உற்சவம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல் நாளில் ஹரிநாம சங்க ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இரண்டாம் நாள் காலை முதல் இரவு வரை 12 மணி நேரம் தொடர்ந்து இஸ்கான் மையத்தில் ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. பஜனை, கீர்த்தனை மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். உலக நன்மை, அமைதி மற்றும் மனிதர்களின் முன்னேற்றத்திற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக இஸ்கான் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT