திருப்பதி ஏழுமலையான் கோவில் 
ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் நடக்கும் விழாக்கள் விவரம்

செப்டம்பர் 15-ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் கோகுலாஷ்டமி, தங்கத் தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

செப்டம்பர் மாத விழாக்கள்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

செப்டம்பர் மாதத்தில் திருமலையில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகளின் விவரங்கள்:

* செப்டம்பர் 4: ஏழுமலையான் கோவிலில் கோகுலாஷ்டமி ஆஸ்தானம்.

* செப்டம்பர் 5: ஏழுமலையான் கோவிலில் சிக்யோத்ஸவம்.

* செப்டம்பர் 13: பலராம ஜெயந்தி மற்றும் வராஹ ஜெயந்தி.

* செப்டம்பர் 14: பிரம்மோற்சவ விழாவிற்கான அங்குரார்ப்பணம்.

* செப்டம்பர் 15: பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

* செப்டம்பர் 19: ஏழுமலையான் கருட சேவை.

தேரோட்டம்

* செப்டம்பர் 20: தங்கத் தேரோட்டம்

* செப்டம்பர் 22: தேர் திருவிழா

* செப்டம்பர் 23: திருமலையில் சக்கரஸ்நானம் மற்றும் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு

* செப்டம்பர் 24: ஏழுமலையான் பாக் சவாரி உற்சவம்

* செப்டம்பர் 25: திருமலையில் அனந்த பத்மநாப விரத உற்சவம் மற்றும் ஸ்ரீவாரி சக்ரஸ்நானம்.

இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT