களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டை கருட சேவை 
ஆன்மிகம்

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டை கருட சேவை

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று மாலை திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

களக்காடு,

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5ம் நாளான நேற்று முன்தினம் இரட்டை கருட சேவை விழா நடந்தது. இதனை முன்னிட்டு விஷேச அலங்கார தீபாராதனைகளுக்கு பின்னர் வரதராஜ பெருமாளும், வெங்கடாஜலபதி சுவாமியும் தனித்தனி கருட வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்நிழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் 7ம் நாளான இன்று 30ம் தேதி மாலை திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

8ம் நாளான நாளை (31ம் தேதி) நாடார் சமுதாய மண்டகப்படி நடக்கிறது. இதனையொட்டி மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானத்தை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் தொடங்கி வைக்கிறார்.

இரவில் பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி வருகிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாடார் சமுதாய மண்டகப்படி குழுவினர் செய்து வருகின்றனர்.

10ம் நாளான ஏப்ரல் 2ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் ஊழியர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.