திருப்பதி. நவ.16-
திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோவிலில் ஒரு மாத காலம் நடைபெறும் கார்த்திகை ஹோம மகோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நவக்கிரக ஹோமம், திங்கட்கிழமை தட்சிணாமூர்த்தி சுவாமி ஹோமம் நடைபெற்றது. பக்தி பாரம்பரிய சடங்குகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவில் துணை அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஹோம மகோற்சவத்தில் நேற்று காலபைரவர் ஹோமம் நடைபெற்றது. இதையொட்டி, அஷ்டபைரவர் ஹோமம், மகா பூர்ணாஹுதி மற்றும் மகாசாந்தி அபிஷேகம் ஆகியவை ஆகம விதிகளின்படி நடந்தது. மூலவர் காலபைரவருக்கு கலசாபிஷேகமும் நடத்தப்பட்டது. மாலையில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இன்று (புதன்கிழமை) முதல் 26-ந் தேதி வரை சண்டியாகம் நடைபெறுகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் கோவில் துணை செயல் அலுவலர் நாகரத்னா, உதவி செயல் அலுவலர் குமாரி தேவி, கண்காணிப்பாளர் சந்திரசேகர், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.