திருவட்டார்,
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வெண்டலிகோடு காவுகுளம் ஶ்ரீ நாகராஜா கோவிலில் புனர் பிரதிஷ்டையும், கும்பாபிஷேகத்தின் 16வது ஆண்டு நிறைவு விழாவும், வருடாந்திர திருவிழாவும் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் 6-ம் நாள் காலையில் கணபதி ஹோமம் அதை தொடர்ந்து சிறப்பு அஷ்டாபிஷேகம் நடைபெற்றது மாலையில் நெட்டாங்கோடு ஸ்ரீ சாரதா தேவி ஆஸ்ரமத்தை சேர்ந்த யோகேஷ்வரி மீராபுரி மாதாஜி தலைமையில் 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் வெண்டலிகோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட 3 பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன.