அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் லட்சார்ச்சனை 
ஆன்மிகம்

கரூர்: கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் லட்சார்ச்சனை

சிறப்பு பூஜைகளில் கரியாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கரூர்,

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் லட்சார்ச்சனை, சிறப்பு யாகம் மற்றும் 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி கோவில் வளாகத்தில் அக்னிகுண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் யாக பூஜை செய்தார்கள். அதனை தொடர்ந்து லட்சார்ச்சனை நடைபெற்றது. பின்னர் 108 வலம்புரி சங்குகளுக்கு புனித நீர் ஊற்றி பூக்கள் போட்டு பூஜை செய்யப்பட்டது. அந்த புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு அபிஷேகம்

முன்னதாக அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த சிறப்பு பூஜைகளில் கரியாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.