மஹா சண்டி யாகம் 
ஆன்மிகம்

கரூர்: உலக நலன் வேண்டி கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மஹா சண்டி யாகம்

யாக பூஜைகளைத் தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

கரூர்,

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் வீற்றிருக்கும் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மஹா சண்டி யாகம் நடைபெற்றது. உலக மக்கள் நலன் வேண்டியும், மண்ணில் உயிர்கள் செழித்து வாழ மழை வேண்டியும் இந்த யாகம் நடத்தப்பட்டது.

மஹா சண்டியாகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் யாக பூஜைகளை நடத்தினர்.

யாக பூஜைகளைத் தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மகா சண்டி யாகம் மற்றும் சிறப்பு பூஜையில் கரியாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.