ஆன்மிகம்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: முத்தாரம்மன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

குலசையில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 3,700 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி,

குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு நடக்க உள்ளது. இதையொட்டி 3,700 போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

தசரா திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் பகுதி யில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் விரதம் இருந்து வேடம் அணிந்து கோவிலுக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 11-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு நடக்கிறது. இதனை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதனால் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

“குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வு நடைபெறும் நாட்களான நேற்று முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதற்காக வேறுமாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி 4 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 14 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 47 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 3 ஆயிரத்து 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தீவிர கண்காணிப்பு

மேலும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் சாதாரண உடையணிந்த ஆண், பெண் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.மேலும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் சாதாரண உடையணிந்த ஆண், பெண் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

10 கண்காணிப்பு கோபுரங்கள், சுமார் 50 போலீஸ் உதவி மையங்கள், 7 நகரும்கண்காணிப்பு கேமரா வாகனங்கள், 300-க்கும் மேற்பட்ட நிலையான கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 3 முக்கிய சாலைகளில் வாகனங்களின் பதிவு எண்ணை துல்லியமாக அறியும் ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு திரை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார்மூலம் கண்காணிப்பட்டு வருகின்றன. மேலும் 5 டிரோன் கேமராக்கள் மூலம்வான்வழி கண்காணிப்பு, 5 முக அடையாள கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதில் 1000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப் பட்டு அதன் மூலம் அவர்கள் கண்காணிப்பு கேமிராக்களின் பார்வைக்குள் வரும் பட்சத்தில் அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.”

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT