லட்ச தீப வழிபாடு 
ஆன்மிகம்

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் லட்ச தீப வழிபாடு

கோவில் வளாகத்தில் சங்கு, சக்கரம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் அழகிய அத்தப்பூ கோலம் போடப்பட்டு, அதிலும் விளக்குகள் ஏற்றப்பட்டன.

தாடிக்கொம்பு,

திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பில் பிரசித்தி பெற்ற சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் நேற்று லட்ச தீப வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி சௌந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சன்னதியில் இருந்து திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. அந்த தீபத்தை எடுத்து, கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் அடுக்கி வைத்திருந்த ஒரு லட்சத்திற்கும் மேலான அகல் விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வழிபட்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் தீப ஒளியில் ஜொலித்தது.

இதன் பின்னர் கோவில் முன்பாக உள்ள தீபக் கம்பத்தில் பட்டாச்சாரியார்களால் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என சரண கோஷமிட்டபடி தீபத்த தரிசனம் செய்தனர்.

சொக்கப்பனை

கோவில் வளாகத்தில் பெருமாளின் சங்கு, சக்கரம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் அழகிய அத்தப்பூ கோலம் போடப்பட்டு, அதிலும் விளக்குகள் ஏற்றப்பட்டன.

பின்னர் சௌந்தரராஜ பெருமாள் தேரடிக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து திருக்கார்த்திகை மண்டபத்தில் ஏகாந்த சேவையில் சௌந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT