மதுரை,
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் தினமும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில வலம் வருவார்கள்.
சித்திரை திருவிழாவின் 2-ம் நாளான இன்று காலையில் தங்க சப்பரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன், மீனாட்சி அம்மன் எழுந்தருளி மாசி வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 26-ந் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 28-ம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம், 29-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.