மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உலகப்புகழ் பெற்ற சித்திரை பெரு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் முக்கிய வைபவமான மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 28-ந்தேதி கோவிலின் வடக்கு, மேற்கு ஆடி வீதிகள் சந்திப்பில், திருக்கல் யாண மண்டபத்தில் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் நடை பெற உள்ளது. மீனாட்சி திருக்கல்யாணத்தை காணும் பக்தர்களின் வச திக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வைத்திருப்பவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருப வர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையில் பக்தர்கள் தெற்கு கோபு ரம் வழியாகவும் அனுமதிக்கப்பட உள்ளனர்..
இதற்கான கட்டணச்சீட்டு முன்பதிவு வசதி கோவில் இணையதளத்தில் maduraimeenakshi.hrce.tn.gov.in இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் இன்று (ஞாயிற்றுக்கி ழமை) முதல் 22-ந்தேதி இரவு 9 மணி வரை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒருவர் அதிகபட்சமாக ரூ.500 கட்டண சீட்டுகள் 2 மட்டுமே பெற முடி யும். ரூ.200 கட்டண சீட்டு என்றால் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.20℃ கட்டணசீட்டுகளை பெற முடியாது. பிறந்த தேதியை சரியாக பூர்த்தி செய்து இருக்க வேண்டும். ஒரு பதிவுக்கு ஒரு போன் எண் மட்டுமே பயன்படுத்த முடியும். பாதுகாப்பு கருதி திருக்கல்யாணத்தன்று குழந்தை களை அழைத்து வருவதை தவிர்க்கவும்.
கோவிலுக்கு சொந்தமான எல்லீஸ் நகரில் அமைந்துள்ள யாத்ரிநிவாஸ் தங்கும் விடுதியில் ரூ.500, ரூ.200 கட்டண சீட்டுகளுக்கு இன்றில் இருந்து நேரில் வந்தும் பதிவு செய்து கொள்ளளலாம். ஆதார் நகல், புகைப்படத் துடன் கூடிய அடையாள சான்று, போன் எண், இ-மெயில் முகவரி அவசி யம். அதிக பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து போன் எண், இ-மெயிலில் 23-ந்தேதியன்று தகவல் தெரி விக்கப்படும். சம்பந்தப்பட்டோர் 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எல்லீஸ் நகரில் அமைந் துள்ள யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்., இ-மெயில் தகவலை காண்பித்து பணம் செலுத்தி, திருக் கல்யாண கட்டண சீட்டை பெறலாம். திருக்கல்யாண தினத்தன்று ரூ.500 மதிப்பிலான கட்டணச்சீட்டு வைத்திருப்பவர்கள் வடக்கு மொட்டை முனீஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியிலும், ரூ.200 கட்டண சீட்டு வைத்திருப்பவர்கள் வடக்கு, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே அமைக்கப்பட்டுள்ள பாதை வழியாக வடக்கு கோபுரம் பகுதியில் அனும திக்கப்படுவார்கள்.
திருக்கல்யாண டிக்கெட் பெற்றவர்கள் அன்று காலை 5 மணியில் இருந்து 7 மணிக்குள் வந்து, ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தரிசிக்க அறிவுறுத் தப்பட்டு உள்ளது.