கும்பாபிஷேக விழா 
ஆன்மிகம்

மதுரை: பாறைப்பட்டி காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பாறைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி மூன்று நாட்கள் யாகசாலை பூஜை நடைபெற்றது. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், அதனைத் தொடர்ந்து மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

யாகசாலை பூஜைகளை தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் வானத்தில் கருடன் வட்டமிட, கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருக்கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.