குடமுழுக்கு 
ஆன்மிகம்

தென்பிடாகை மகா காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

நாகை,

நாகை மாவட்டம் தென்பிடாகை கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

மகா காளியம்மன் கோவில்

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் தென்பிடாகை கிராமத்தில் கள்ளழகர், மகா காளியம்மன், பொம்மியம்மன், பெரிய கருப்பன், சோனகருப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் கடந்த 31-ம் தேதி குடமுழுக்கு விழா தொடங்கியது.

அன்றைய தினம் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்தைத் தொடர்ந்து யாக காலை பூஜைகள், மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நேற்று காலை 8.30 மணிக்கு கடம் பறப்பாடு நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் புனித கடங்களை தலையில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து விமான கோபுரங்களை அடைந்ததும், காலை 8.45 மணிக்கு விமான குடமுழுக்கு நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் குடமுழுக்கும் நடைபெற்றது.

விழாவில் தென்பிடாகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT