நாகப்பட்டினம்,
சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி, இளநீர், பால், தேன், கரும்புசாறு, பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
அதேபோல் விட்ட வாசல் விநாயகர், செங்கழுனி விநாயகர், வல்லபகணபதி, சாபம் தீர்த்த விநாயகர், ஏழை பிள்ளையார் கோவில், சாலமண் தோட்டம் செல்வ விநாயகர், சொக்கநாதர் கோவில் செல்வ விநாயகர், மறைமலைநகர் சித்தி விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.