கும்பாபிஷேக விழா 
ஆன்மிகம்

நிலக்கோட்டை: வெள்ளைத்தாதன்பட்டி காளி -பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

நிலக்கோட்டை,

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சிலுக்குவார்பட்டி, வெள்ளைத்தாதன்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள்

முதல் நாள் - செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு முகூர்த்த கால் ஊன்றுதல், பந்தக்கால் நடுதலுடன் விழா தொடங்கியது. மங்கள இசை முழங்க, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனை, மகா கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை நடைபெற்று தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.

இரண்டாம் நாள் - வியாழக்கிழமை (19.11.2026) காலை 7.35 மணிக்கு கோ பூஜை, அஷ்டதிக் பாலகர் பூஜை, கலச பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு வாஸ்து சாந்தி ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு தீர்த்த குடம், முளைப்பாரி அழைப்பு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மேல் மூன்றாம் கால யாக பூஜை, இரவு 7 மணிக்கு மேல் வேத பாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடல்கள், இரவு 8 மணிக்கு மேல் யந்திர ஸ்தாபனம், நவரத்தினம், பஞ்சலோகம் பிரதிஷ்டை நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

மூன்றாம் நாளான இன்று (20.11.2026) காலை 7 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, தோஷ நிவர்த்தி, யாக பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு யாத்திரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன்பின் 9.20 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சிலுக்குவார்பட்டி, வெள்ளைத்தாதன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT