ஆன்மிகம்

வேளாங்கண்ணி பேரலாயத்திற்கு இனி எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்... பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

வேளாங்கண்ணி பேராலயம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்,

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் இந்த ஆலயம் ஆன்மீக தலமாகவும் விளங்குகிறது.

மேலும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந்தேதி வரை 10 நாள் நடைபெற்றது. இதற்காக தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை பேராலயம் திறந்து இருக்கும். இதனால் இரவில் வேளாங்கண்ணி வரும் பக்தர்கள் அங்கேயே அறை எடுத்து தங்கியிருந்து மறுநாள் காலையில் மாதாவை தரிசிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் வருகிற அக்டோபர் 3-ந்தேதி முதல் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்திருக்கும் என்று தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாய ராஜ் தெரிவித்துள்ளார். பக்தர்கள் எந்த நேரத்திலும் பேராலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஆயர் சகாய ராஜ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT