ஆன்மிகம்

திருப்பதி கோவிலில் சொர்கவாசல் திறப்பு: புதிய வழிகாட்டுகள் வெளியீடு

சொர்க்க வாசல் வழியே ஏழு மலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

திருமலை,

திருப்பதி கோவிலில் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த நிலையில் புதிய வழிகாட்டுதல்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் சொர்க் கவாசல் திறப்பு குறித்து திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகை அரங்கில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி கூறியதாவது:-

திருமலையில் பிரம்மோற்சவத்துக்கு அடுத்தப்படியாக வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்க வாசல் வழியே ஏழு மலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். டிச.20 முதல் 29ம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதில் சாமானிய பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

கடந்த ஆண்டுவைகுண்ட ஏகாதசிக்கு 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசித்துள்ளனர். அதே போன்று, இந்த ஆண்டும் முதல் நாட்கள் ஆன்லைனில் சர்வ தரிசன டோக்கன்கள் குலுக்கல் முறையில் வழங்கப் படும். அடுத்த 7 நாட்கள் வெறும் சர்வ தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும்.

டிச.25ம் தேதி வெள்ளியன்று மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும். அப்போதுகூட சர்வ தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT