பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் 
ஆன்மிகம்

சோழவந்தான் செண்பகவல்லி அம்மன் கோவிலில் பால்குடம் விழா

பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பூஜை செய்து பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

சோழவந்தான் மேலரத வீதி, கின்னி மட தெருவில் அமைந்துள்ள செண்பகவல்லி அம்மன் ஆலயத்தில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1ம் தேதி பால்குடம் விழா நடைபெற்று வருகிறது. அவ்வகையில் சித்திரை முதல் நாளான இன்று பால்குடம் விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் வைகை ஆற்றுக்கு சென்று பூஜை செய்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நான்கு ரத வீதி மேளதாளத்துடன் வலம் வந்து கோவிலில் வந்து அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இவ்விழாவை முன்னிட்டு கடந்த மாதம் அழகர் கோவில் சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். இன்று மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.