திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் திருக்கல்யாணம் 
ஆன்மிகம்

பங்குனி பிரம்மோற்சவ விழா.. திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் திருக்கல்யாணம்

நாளை மறுதினம் மகா அபிஷேகத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவுபெறுகிறது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி விக்னேஸ்வரர் உற்சவத்துடன் தொடங்கியது.

இந்த பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நேற்று இரவு திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. உற்சவமூர்த்திகள் திருமணக் கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு சாஸ்திர முறைப்படி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண உற்சவம்

இதைத்தொடர்ந்து மாலையில் உற்சவர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது. நாளை (23.3.2026) தீர்த்தவாரி நடைபெறுகிறது. நாளை மறுதினம் (24.3.2026) மகா அபிஷேகத்துடன் பிரம்மோற்சவம் நிறைவுபெறுகிறது.