தேரோட்டம் 
ஆன்மிகம்

வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்

தேரோட்டத்தை முன்னிட்டு ரங்கநாத பெருமாளுக்கும் ரங்கநாயகி தாயாருக்கும் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன.

வந்தவாசி,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் உள்ள மிகவும் பழமையான ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி மாதம் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி ரங்கநாத பெருமாளுக்கும் ரங்கநாயகி தாயாருக்கும் அதிகாலை முதல் திறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாத பெருமாள் மற்றும் ரங்கநாயகி தாயார் தேரில் அமர்த்தப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தேர் வடம் பிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து ‘கோவிந்தா கோவிந்தா’ என்று பக்தி முழக்கம் எழுப்பியபடி தேர் இழுத்தனர். ரங்கநாத பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், காந்தி சாலை, அச்சரப்பாக்கம் சாலை, கே ஆர் கே தெரு, சன்னதி தெரு வழியாக சென்று நிலையை அடைந்தது.