சென்னை:
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக மயிலாப்பூரின் காவல் தெய்வமான கோலவிழி அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவிழா நாட்களில் தினமும் வாகன விதி உலா, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நாளை காலையில் சூரிய பிரபை வாகனத்திலும், இரவில் சந்திர பிரபை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் 29-ம் தேதி காலையில் நடைபெறும். ஏப்ரல் 1-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.