திருவள்ளூர்,
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வர் கோவில் நடராஜப் பெருமாள் திருநடனம் புரிந்த 5 சபைகளில் முதல் சபை ரத்தின சபையாக திகழ்கிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் விமரிசையக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் தினமும் தினமும் காலையிலும், இரவிலும் வாகன வீதியுலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிம்ம வாகனம், சூரிய பிரபை, அன்ன வாகனம், பூத வாகனம், பல்லக்கு, நாக வாகனம், புலி, யானை என தினமும் வெவ்வேறு வாகனங்களில் உற்சவர் வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி அம்மன் எழுந்தருளி திருவாலங்காடின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
பிரம்மோற்சவ விழாவின் 7ம் நாளான மார்ச் 28-ஆம் தேதி காலையில் தேரோட்டம் நடைபெற உள்ளது.