பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமான் மற்றும் பொத்தனூர் பச்சைமலை பாலதண்டாயுதபாணி சுவாமி 
ஆன்மிகம்

பரமத்திவேலூர்: முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சிறப்பு பூஜையில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் கோப்பணம்பாளையத்தில் பரமேஸ்வர் கோவிலில் உள்ள பாலமுருகன் கோவில், மோகனூர் காந்தமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், கபிலர்மலை பாலசுப்ரமணியசுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், பொத்தனூர் பச்சைமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்,

அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், பாலப்பட்டி கதிர்காமத்து கதிர்மலை முருகன், நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வழக்கு சங்கிலி கருப்பணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவில், திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர், ராஜா சுவாமி கோவிலில் உள்ள ராஜா சுவாமி, கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.