சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் 
ஆன்மிகம்

பரமத்தி வேலூர்: முருகன் கோவில்களில் சஷ்டி வழிபாடு

சஷ்டி பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

பரமத்தி வேலூர் கோவில்கள்

பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில், கபிலர்மலை பாலசுப்பிரமணிய‌ சுவாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில்‌ உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌ முருகன் கோவிலில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி,

அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் ‌விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள ‌சுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜா சுவாமி திருக்கோவில் உள்ள ராஜாசுவாமி, , பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி, கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.