பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஆவணி மாத சஷ்டியை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான், நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவிலில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி,
அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜா சுவாமி திருக்கோவில் உள்ள ராஜாசுவாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி, கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பத்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.